இலங்கை

யாழில் இளைஞனை காணவில்லை: பொது மக்களிடம் உதவி கோரியுள்ள உறவினர்கள்!

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன் காணாமல் போய் உள்ளதாக குறித்த முறைபாட்டில் அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் காணாமல் போன தினத்தில் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த நிலையிலேயே இளைஞர் காணாமல் போயுள்ளதாகவும், இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது எங்களது தொலைபேசி இலக்கங்களான 772690673 அல்லது 0776523229 – க்கு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button