இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்..!
கடந்த வெள்ளிக்கிழமையுடன்(26) ஒப்பிடும் போது இன்றையதினம்(29.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது.
அத்தோடு, கடந்த இரு வாரங்களாக வெளிநாட்டு நாணயங்கள் பலவற்றிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
இவ்வாறுஇருக்கையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (29.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 322.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 312.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு, கனேடிய டொலரின் விற்பனை விலை 241.28 ரூபாவாகவும், கொள்வனவு விலை 230.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 351.55 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 337.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.33 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 395.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.