கணவன் வெளிநாட்டில்: வவுனியாவில் பெண்ணின் சடலம்: கடந்த வாரமும் உயிரை மாய்க்க முயற்சி!
வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவாதவது
வவுனியா காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் 29-வயதுடைய ஜெனிற்றா என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப் பட்டுள்ளார்
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் இந்நிலையில் கணவருடைய குடும்பத்தினருடன் தனது 7வயது மகனுடன் வசித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
இதேவேளை குறித்த பெண் கடந்த வாரமும் தனது மகனுடன் கிணற்றில் வீழ்ந்து உயிரைமாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் சத்தம் கேட்டு அயலவர்கள் மீட்டெடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பான மரணவிசாரனையை திடீர் மரண விசாரனை அதிகாரி சுரேந்திர சேகரன் அவர்கள் மேற்கொண்டு வருவதுடன் வவுனியா பொலிஸாரும் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.