இலங்கைமுக்கிய செய்திகள்

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமுல்!

எரிபொருள் நிறுவனம் இன்றையதினம் (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.

ஓட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 363 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.

அத்துடன், மண்ணெண்ணெய் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளநிலையில், அதன் புதிய விலை 262 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button