இலங்கை

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் முன்னிலை

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதற்காக மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் (2.2.2024) கைது செய்யப்பட்டிருந்த கெஹெலிய ரம்புக்வெல்லவை நேற்று மாலையே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைய இன்றைய தினமே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார்.

எனினும்    அதற்கேற்ப தற்போதைக்கு மாளிகாகந்தை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  தரமற்ற மருந்துப் பொருள் மோசடி தொடர்பான வழக்கில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட ஆறுபேர் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு    சுகாதார அமைச்சின் முன்னாள் களஞ்சியப் பொறுப்பாளர் மாத்திரம் நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மிக உயர் அதிகார மட்டத்தில் இருப்பவராக ஊடகங்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் இன்னும் சற்று நேரத்தில் கெஹெலிய , நீதிபதி முன்பாக முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button