இலங்கை
யாழை சேர்ந்த சில இளைஞர்களை பாராட்டிய சரத் வீரசேகர!
யாழில் தேசிய கொடியை ஏந்தியவாறு பொதுமக்கள் சிலர் சுதந்திரத்தை கொண்டாடியதை வரவேற்பதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றையதினம் (4) இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருவதை அனைவரும் அறிந்த விடயம்.
அதேபோல் இந்த வருடமும் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.