சாந்தனுக்கான கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது: அங்கஜன்!
சாந்தனுக்கான கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவரது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, அவருக்குரிய கடவுச்சீட்டு தேவைப்பட்ட நிலையில், இவ்விடயம் தொடர்பாக எம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கமைய, இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக அவருக்குரிய கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறைக்கு சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால் எனக்கு அறியத்தரப்பட்டுள்ளது.
இதன்படி, சாந்தன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் வரும்நாட்களில் இந்திய அரசு தரப்பினால் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.