கோட்டாவின் நிலைக்கு காரணம் ஆணவம்: பிள்ளையானுக்கு அட்வைஸ்: கருணா பேச்சு!
கோட்டாபய ராஜபக்ச ஆணவம் பிடித்து செயற்பட்டமையினாலேயே இன்று அவர் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார்.
அத்தோடு, கோட்டாபய ராஜபக்சவை என்றுமே தாம் அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் வேறு வழி இல்லாமல் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டமைக்கு இணங்கியே அதிபர் தேர்தலில் கோட்டாபயவிற்கு ஆதரவாக செயற்பட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பிள்ளையான் என்ற சந்திரகாந்தன் பிரதேசவாதம் கொண்ட கருத்துக்களை வெளியிடுவதை தாம் ஏற்கப்போவதில்லை என்றும் அரசியல் ரீதியாக மேலும் முதிர்ச்சியடைய வேண்டிய நிலைகள் காணப்படுகின்றதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.
மேலும், பிள்ளையானின் கருத்து பிரியோகங்கள் வார்த்தை பிரயோகங்களையும் மாற்றியமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அவர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.