இலங்கை
மட்டக்களப்பில் பெரும் சோகம்: இளைஞன் உட்பட இருவர் பலி!
மட்டக்களப்பு – கிரானில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 மற்றும் 51 வயதான குறித்த இருவரும் யானை வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இன்றையதினம் (13) காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள செய்கையை பாதுகாப்பதற்காக சென்ற இருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலங்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.