இலங்கைமுக்கிய செய்திகள்

திருகோணமலையில் இருவர் உயிரிழப்பு: நடந்தது என்ன?

திருகோணமலை – கிண்ணியா, உப்பாற்றில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் செய்தி பதிவாகியுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடு இன்றையதினம் (14) காலை 7 மணியளவில் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்றையதினம் காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன், மற்றையவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், காணாமற்போயிருந்த மற்றுமொருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button