இலங்கை
யாழ் கோர விபத்து தொடர்பில் வெளியான சோகமான பின்னணி!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தொடருந்துடன் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.
குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில், வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடருந்து கடவை காப்பாளர் இல்லாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் என செய்திகளில் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.