நிறைவடைந்த ஹரிகரனின் இசை நிகழ்ச்சி தொடர்பில் ரம்பாவின் கணவர் அதிரடி முடிவு!
- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன்.” என NORTHERNUNI இன் தலைவர் இந்திரகுமார் பத்மநாதன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலட்சக்கணக்கான இரசிகப் பெருமக்களைத் தாண்டி வெகுவிமரிசையாக NORTHERNUNI இன் ஒருங்கமைப்பில் அரங்கேறிய ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரக் கொண்டாட்டம் பெரும் குழப்பத்தில் முடிந்தது அனைவரும் அறிந்ததே.
அதற்கு விளக்கமளிக்கும் வகையில் NORTHERNUNI இன் தலைவரும் நடிகை ரம்பாவின் கணவருமான இந்திரகுமார் பத்மநாதன் அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார்.
அதில் “சில விசமிகளால் இந்த ஹரிகரன் நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதற்கு மிகவும் மனம் வருந்துகின்றோம்.
எனினும் பெருமளவு பாதிப்பு ஏற்படாது அனைவரையும் பாதுகாத்து இந்நிகழ்வு நிறைவடைந்ததற்கு எமது மக்களுக்கும் இறைவனுக்கும் நானும் எனது குடும்பத்தினரும் மிகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
தங்களால் செலுத்தப்பட்ட பணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்த எண்ணுவோர் அவ்வாறே அதனை விட்டு விட, பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை – 0777315262 தொடர்பு கொள்ளுங்கள்.” என அவர் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.