இலங்கைமுக்கிய செய்திகள்

மன்னாரில் அதிர்ச்சி: சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை!

மன்னார் தலைமன்னார் கிராமத்தில் பத்து வயதான சிறுமி ஒருவர் நேற்றையதினம் (15) இரவு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்று வாழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் அருகில் இருக்கும் தாய் ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்புடனும் பழகி வந்திருக்கின்றார்.

சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் தாயின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த நிலையில் அருகில் இருந்த CCTV கமராக்களின் உதவியுடனும் ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் இன்றையதினம் அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது தலைமன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது போன்ற அவலம் இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button